close
Choose your channels

அரசியலில் நுழைகிறார் ஜானி மாஸ்டர்! பிரபல நடிகரின் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டில் உள்ள சில படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வரும் ஜானி மாஸ்டர் திடீரென பிரபல நடிகர் ஒருவரின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும் ஏராளமான தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருபவர் ஜானி மாஸ்டர். இவரது டான்ஸ் அபாரமாக இருக்கும் என்பதும் முன்னணி நடிகர்களே இவரது டான்ஸ் இயக்கத்தில் நடனமாட விருப்பம் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென டான்ஸ் மாஸ்டர் ஜானி அரசியலில் குதித்து உள்ளார். அவர் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடத்தி வரும் ஜனசேனா பார்ட்டி என்ற அரசியல் கட்சியில் நேற்று இணைந்து உள்ளார். இதனை அடுத்து அவர் பவன் கல்யாண் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பிரபல தெலுங்கு நடிகர் பிருத்விராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து ஜனசேனா பார்ட்டியில் இணைந்த நிலையில் தற்போது ஜானி மாஸ்டரும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜானி மாஸ்டர் ஆந்திர மாநில அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.