close
Choose your channels

'தலைவர் 167' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 167' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை 8.30 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ரஜினியின் 167வது படத்திற்கு 'தர்பார்'  என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும்  ரஜினியின் அட்டகாசமான சிரிப்புடன் கூடிய கெட்டப் பர்ஸ்ட்லுக்கில் உள்ளது. அவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதற்கான குறிப்பீடுகளும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் உள்ளது. அவரை சுற்றி பயங்கர ஆயுதங்கள் இருக்கின்றது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில் டிரண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'சந்திரமுகி' படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த், நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ள இந்த படத்தில் 'பேட்ட' படத்திற்கு பின் மீண்டும் அனிருத் இணைந்துள்ளார். அதேபோல் தளபதி படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளாரகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.