close
Choose your channels

ஆக்சன் - த்ரில்லர் தெலுங்கு படத்தில் 'கபாலி' நடிகை

Friday, March 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் ரஜினியின் 'கபாலி' உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல கதாசிரியர் கிரண் இயக்கும் முதல் படமான இந்த படம் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் தன்ஷிகா இரண்டு வித கேரக்டரில் நடிப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் இரட்டை வேடம் இல்லை என்றும் தன்ஷிகா கூறியுள்ளார். இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு ஜோடி யாரும் இல்லை என்றாலும் பிரபல தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

இதுவொரு ஆக்சன் படம் என்பதால் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் தன்ஷிகா டூப் இல்லாமல் நடித்து இயக்குனரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார். குறிப்பாக  டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் தன்ஷிகா நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். தன்ஷிகாவின் முதல் தெலுங்கு படமான இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.