close
Choose your channels

'வாரிசு' - 'துணிவு': இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான உடன்பாடு!

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் புக் செய்வதில் போட்டி ஏற்பட்டது என்றும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம்.

பெரிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பல ஸ்க்ரீன்கள் இருக்கும் என்பதால் அந்த திரையரங்குகளில் வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுக்கும் ஸ்க்ரீன்களை பிரித்துக் கொடுப்பதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.

ஆனால் அதே நேரத்தில் சிறிய நகரங்களில் ஒரே ஒரு தியேட்டர் மட்டும் இருக்கும் ஊர்களில் எந்த படத்தை ரிலீஸ் செய்வது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவ்வாறு இருக்கும் ஒரே ஒரு திரையரங்கை புக் செய்ய போட்டி நிலவி வருவதை அடுத்து ஒரு வித்தியாசமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு திரையரங்கு இருக்கும் பகுதியில் வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களையும் தலா இரண்டு காட்சிகள் திரையிட உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இரு தரப்பு ரசிகர்களும் இரண்டு படங்களையும் பார்க்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனி திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் ஏற்பட்ட போட்டியை அடுத்து இந்த புதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.