close
Choose your channels

இணையத்தில் லீக் ஆகிவிட்டதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': அதிர்ச்சியில் படக்குழுவினர்!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இணையும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளின் ஒரு சில பகுதி இணையத்தில் லீக் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சியில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் திருவிழா ஒன்றில் ஆடி பாடி நடனம் ஆடுவதாக உள்ளன. இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை நிறுத்த புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.