close
Choose your channels

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

Friday, February 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனையொட்டி வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படமான 'வடசென்னை' திரைப்படத்தில் தனுஷூடன் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெகுவிரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி இவ்வருட மத்தியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.