close
Choose your channels

தனுஷின் அடுத்த பட இசை வெளியீடு வெளிநாட்டிலா? ஆச்சரிய தகவல்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக இந்த படம் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மலேசியாவில் நடத்த முடியாத பட்சத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.