close
Choose your channels

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதியை இணைத்த கே.எஸ்.ரவிகுமார்

Monday, July 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் சீனியர் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தற்போது 'முடிஞ்சா இவனப் புடி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஆடியோ ஜூலை 20ஆம் தேதி சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் காலை 8.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியைவிட முக்கிய செய்தி, இந்த ஆடியோ விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என மூன்று பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் என்பதுதான். தனுஷ் இந்த ஆடியோ விழாற்கு தலைமையேற்க சிவகார்த்திகேயன் இந்த படத்தின் முதல் ஆடியோ டிவிடியை வெளியிட அதை விஜய்சேதுபதி பெற்றுக் கொள்கிறார். ஒரே மேடையில் மூன்று பிரபல நடிகர்களையும் இணைத்த பெருமை கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், நித்யாமேனன், சதீஷ், பிரகாஷ்ராஜ், நாசர், இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.