close
Choose your channels

துருவ் விக்ரமின் 4வது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. இயக்குனர் யார் தெரியுமா?

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அவரது நான்காவது படத்தை இயக்கும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ‘ஆதித்யா வர்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’மகான்’ படத்தில் தந்தை விக்ரம் உடன் இணைந்து துருவ் விக்ரம் நடித்தார்.

இந்த நிலையில் துருவ் விக்ரமின் மூன்றாவது படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கபடி வீரர் கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் துருவ் விக்ரம் 4வது படத்தை கணேஷ் பாபு இயக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இவர் கவின், அபர்ணா தாஸ் நடித்த ’டாடா’ படத்தை இயக்கியவர். மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.