close
Choose your channels

கமல் படத்தை இயக்க மறுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் கேட்டுக்கொண்டும் தமிழ் படத்தை இயக்க மறுத்த பிரபல மலையாள பெண் இயக்குனர் ஒருவர், தற்போது தமிழுக்கு வர இருப்பதாகவும், அவர் இயக்க இருக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் ’கேரளா கபே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு ’உஸ்தாத் ஹோட்டல்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ’பெங்களூரு டேஸ்’ என்ற படத்தை இவர் இயக்கினார் என்பதும் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 8 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு ரூ.45 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் உட்பட பல பிரபல நடிகர்கள் கேட்டுக் கொண்டும் அவர்களது தமிழ் படத்தை இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்க மறுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் என்ட்ரியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு அழகான காதல் கதையுடன் அவர் தமிழுக்கு வருவதாகவும் அனேகமாக இந்த படத்தின் ஹீரோ துருவ் விக்ரமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.