close
Choose your channels

இவ்வளவு கோபத்தை வச்சுகிட்டு என்னடா சாதிக்க போற! 'ஆதித்யவர்மா' டீசர்

Sunday, June 16, 2019 • தமிழ் Comments

துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்யவர்மா' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஆதித்ய வர்மா, கல்லூரியில், யூனிவர்சிட்டியில் முதல் மாணவன், எதையும் ஒரு தடவை சொன்னால் உடனே புரிந்து கொள்ளக்கூடிய திறமை உள்ளவன், ஆனால் கோபத்தை கட்டுப்படுத்துவதில் ஜீரோ என்ற அடைமொழியுடன் அறிமுகமாகிறார் துருவ் விக்ரம். அதன் பின் வரும் அனைத்து காட்சிகளும் துருவ் விக்ரமின் கோபமான ஆக்சன் காட்சிகள் தான்

இவ்வளவு கோபத்தை வச்சுகிட்டு லைஃப்ல என்னடா சாதிக்க போறாய்? என்ற உபதேசத்தை அடுத்து காதலில் விழும் ஹீரோவுக்கு அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

பாலா இயக்கிய 'வர்மா' படத்தின் டீசரில் இருந்து இந்த டீசர் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. வசனமே இல்லாமல் ஒரு மந்திரத்தின் பின்னணியில் அமைந்த 'வர்மா' டீசருக்கும் ஆக்சன், கோபக்காட்சிகளுடன் ஒருசில வசனங்கள் உள்ள 'ஆதித்ய வர்மா'வுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டிலும் லிப்கிஸ் காட்சிகள் இருப்பது மட்டுமே

ராதன் பின்னணி இசையும் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்பது படத்தின் டீசரில் இருந்தே தெரிய வருகிறது. மொத்தத்தில் துருவ் விக்ரமுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இந்த படம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz