close
Choose your channels

இப்படியா எடுத்தார்கள் 'வலிமை' ஸ்டண்ட் காட்சியை? திலீப் சுப்பராயன் பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு எண்ணிக்கையை பார்க்கும்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் கார் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்ற தகவல் உள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் ‘நீங்க வேற ரொம்ப வெறியேத்துறீங்களே மாஸ்டர்’ போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.