இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம் வைரல்!
அஜித் நடித்த ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் என்பது தெரிந்ததே. மூத்த மகள் கனி தற்போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கி வருகிறார். அவருடைய கணவர் இயக்குனர் திரு.
அதேபோல் இரண்டாவது மகள் விஜயலட்சுமி இயக்குனர் பெரோஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனிக்கும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதும், இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்ததும் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் 3 மருமகன்கள் இடம்பெற்றிருந்த புகைப்படம் ஒன்றை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.