நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்க நொடிகள்' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போலவே அவருடைய மூன்றாவது படமும் ஆக்சன் கலந்த த்ரில் படம் என்று தெரிகிறது. இந்த படத்தின் நாயகனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை 'அசுரவதம்' படத்தை தயாரித்த லீலா லலித்குமார் தயாரிக்கவுள்ளார்.

விக்ரம் தற்போது 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து அவர் 'மகாவீர் கர்ணா' எனற மெகா பட்ஜெட்டில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் இளம் ஹிட் இயக்குனர்

கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

'விஸ்வாசம்' செகண்ட் சிங்கிளில் ஒரு ஆச்சரியம்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சி நொறுக்கு' பாடலால் ஏற்பட்ட இணையதள புயலே இன்னும் அடங்கவில்லை.

என்ன நடக்குது டுவிட்டரில்? தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரை அடிச்சு நொறுக்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' சிங்கிள் பாடல் இணையதளத்தை அதிர வைத்தது என்பது தெரிந்ததே

விஜய்சேதுபதிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்த சன் பிக்சர்ஸ்

சமீபத்தில் சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி சில நிமிடங்கள் தாமதமாக வந்தார்.

ஓவியாவுக்காக சிம்பு செய்த அர்ப்பணிப்பான பணி

ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம் வரும் 21ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'காஞ்சனா 3' மற்றும் '90ml' ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.