close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்த சன் பிக்சர்ஸ்

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவர் வரும்போது ரஜினிகாந்த், கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி இந்த விழாவிற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. இந்த விழா நடைபெறும்போது விஜய்சேதுபதி ஒகேனக்கலில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், அவர் சென்னை திரும்ப வசதியாக தனி விமானம் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதி தனிவிமானத்தில் பைலட்டுடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்து வைரலாகியுள்ளது. இந்த விழாவில் விஜய்சேதுபதி கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.