close
Choose your channels

இது வேணாம் விஜய் சார்.. எம்ஜிஆர் போல் செயல்படுங்கள்: இயக்குனர் பேரரசு அறிவுரை..!

Saturday, February 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் விமர்சனங்களும் மாறி மாறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் விஜய் படங்கள் இனி வெளிவராது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அதிருப்தியில் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் ஒரு கட்சியின் தலைவராகி விட்டார், நாளை முதல்வராகி விடுவார் என்று ரசிகர்கள் தங்களை தேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சினிமாவுக்கு முழுக்கு போடுவதை ஒரு பக்கம் பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பாராட்டினாலும், ஒரு சிலர் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக விஜய் நடித்த ’சிவகாசி’ ’திருப்பாச்சி’ திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: வேணாம் விஜய் சார்! புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்.

முன்னதாக விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்தவுடன் தனது வாழ்த்துக்களை பேரரசு கூறினார். அந்த வாழ்த்து செய்தியில், ‘வாழ்த்துக்கள் திரு.விஜய் அவர்களே! தமிழகத்தில் தமிழ் பெயரோடு கட்சி ஆரம்பித்தற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாருங்கள் வெற்றி வாகை சூடுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.