close
Choose your channels

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையா இவர்? வைரல் புகைப்படம்

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் தங்கை புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா விஜய் டிவிக்கு டிடியிடம் பேட்டி அளித்தபோது விக்னேஷ் சிவனின் தங்கை மற்றும் அம்மா குறித்து கூறியிருந்தார். தனது தங்கை மற்றும் அம்மா மீது விக்னேஷ் சிவன் மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்றும் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போது அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்ட பிறகு தான் சாப்பிடுவார் என்றும் கூறியிருந்தார்.

அம்மா மற்றும் தங்கை மீது அந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கும் விக்கி, தன்னையும் நன்றாக கவனித்துக் கொள்வார் என்று தான் அவரை காதலிக்க தொடங்கினேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.