close
Choose your channels

எந்த அரசியல் கட்சியில் சேர போகிறேன்? சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட வீடியோ..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ஆனால் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து அறிவிப்பை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகத்தில் தெரிவித்த போது எந்த கட்சிகள் சேருவீர்கள்? சத்யராஜ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா? மேயர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? ராஜ்யசபா சீட் கேட்பீர்களா? போன்ற கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.

நான் அரசியலுக்கு வருவது பதவியை பிடிக்கவோ அல்லது வேறு எதற்காகவோ இல்லை, முழுக்க முழுக்க மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மகிழ்மதி இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அந்த இயக்கத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நாங்கள் இலவசமாக அளித்து வருகிறோம்.

அந்த வகையில் தான் அரசியலிலும் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். என்னை ஒரு கட்சி அழைத்தது உண்மைதான், ஆனால் ஒரு மதம் சார்ந்த கட்சியில் சேர எனக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் நான் தனி கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை. நான் எந்த கட்சியில் சேர போகிறேன் என்பதை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.