close
Choose your channels

பீஸ்ட் modeக்கு மாறிய “சார்பட்டா“ மாரியம்மாள்…  செம குத்து டான்ஸ் வீடியோ வைரல்!

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “சார்பாட்டா பரம்பரை“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை துஷாரா விஜயன். இந்தத் திரைப்படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்திற்காக மட்டுமல்ல அவருடைய குத்து நடனத்திற்காகவும் ரசிகர்கள் அவரை பாராட்டி இருந்தனர். அந்த அளவிற்கு குத்து நடனத்திற்குப் பெயர் போன நடிகை துஷாரா தற்போது பீஸ்ட் பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்.

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “பீஸ்ட்“ படத்தின் முதல் ரிலிக்கல் பாடலான “அரபிக் குத்து“ பாடல் சமீபத்தில் ரிலீசாகியது. இந்தப் பாடல் வெளியானதில் இருந்து இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷாட் வீடியோக்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. பிரபலங்கள், இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை பீஸ்ட் மோடிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை துஷாரா விஜயனும் அரபிக்குத்து பாடலுக்கு தனது நண்பர் ஒருவருடன் இணைந்து செம குத்து நடனம் ஆடியிருக்கிறார். மேலும் அந்தப் பாடலின் முடிவில் அவர் கொடுக்கும் ரியாக்ஷனும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாடலிங் துறையைச் சேர்ந்த துஷாரா கடந்த 2017 இல் மிஸ் பேமஸ் சென்னை பட்டத்தை வென்று, பிறகு அதே ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் ரன்னராக வெற்றிப்பெற்றிருந்தார். தொடர்ந்து 2019 இல் “போதை ஏறி புத்தி ஏறி“ திரைப்படத்தில் நடித்திருந்த அவருக்கு “சார்பாட்டா பரம்பரை“ திரைப்படம் பெரிய அளவிற்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. தற்போது “அநீதி“ எனும் திரைப்படத்தில் அவர் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.