தொடரும் முதல் காட்சி ரத்து படங்கள்

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் தற்போது அது வியாழக்கிழமையாக மாறிவிட்டது. அதேபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னர் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும். ஆனால் தற்போது கிட்டதட்ட அனைத்து படங்களும் ஐந்து மணி காட்சிகள் திரையிடப்படுகிறது.

ஐந்து மணி காட்சி திரையிடும் ஆர்வத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் சமீபகாலமாக ஐந்து மணி காட்சிகள் கே.டி.எம் காரணமாக ரத்து செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஐந்து மணி காட்சியை ஆர்வத்துடன் பார்க்க நான்கு மணிக்கே ரசிகர்கள் அரைகுறை தூக்கத்தில் இருந்து எழுந்து திரையரங்குகளுக்கு வந்த பின்னர் திடீரென கே.டி.எம். பிரச்சனையால் காட்சி ரத்து என்பது ரசிகர்களை அலைக்கழிப்பது மட்டுமின்றி மனரீதியாக அந்த படத்தின் மீது ஒருவித கோபத்தை ஏற்படுகிறது. இந்த கோபம் அந்த படத்தை விமர்சிப்பதில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நல்ல படங்களுக்கும் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்து படத்தின் ரிசல்ட்டே மாறிவிடும் அபாயமும் உள்ளது.

எனவே கே.டி.எம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பின்னர் ஐந்து மணிக்காட்சி அறிவிப்பை வெளியிடுவது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இன்று வெளியாகும் விஜய்சேதுபாதி-த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் அதிகாலை காட்சி ரத்து என்ற செய்தி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'96' திரைப்படம்: த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி வைத்த வித்தியாசமான கோரிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் '96'. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த திங்கட்கிழமை திரையிடப்பட்டபோதே

ரஜினி பட இயக்குனரை அழைத்து பாராட்டிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கியதால் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

'பேட்ட' ரஜினியுடன் இணையும் இன்னொரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விஜய் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்: தமிழக அமைச்சர்

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே.