close
Choose your channels

'நான் பிழைப்பேனா? தனுஷ் கேட்பது யாரிடம்?

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் 'மறுவார்த்தை பேசாதே' பாடல் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று அறிவிக்காத நிலையிலேயே இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியது. இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி இந்த படத்தின் இன்னொரு பாடலின் டீசர் வெளியாகவுள்ளது.

'நான் பிழைப்பேனா?' என்று தொடங்கும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளரே வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் அன்றைய தினம் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 'நான் பிழைப்பேனா? என்று தனுஷ் கேட்பது யாரிடம் என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.