close
Choose your channels

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தேதி

Saturday, June 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், இரு துறைகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய வெற்றி படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து தமிழக ஏரியாக்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் நாளை மறுநாள் அதாவது ஜூன் 6-ல் சென்சார் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' மற்றும் 'பென்சில்' ஆகிய படங்கள் 'யூ/ஏ சர்டிபிகேட்டும், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஏ சர்டிபிகேட்டும் பெற்ற நிலையில் இந்த படம் 'யூ' சர்டிபிகேட் பெற்றால் இதுவே ஜி.வி.பிரகாஷின் முதல் 'யூ' படம் என்ற பெருமை கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.