close
Choose your channels

பேபி பம்ப் போட்டோ ஷுட்… வைரலாகும் எருமைசாணி ஹரிஜா புகைப்படம்!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எருமைசாணி எனும் பிரபல யூடியூப் சேனலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹரிஜா. அந்த சேனலின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்யுடன் சேர்ந்து பல குறும்படங்களை நடித்து உள்ளார். இவர்கள் நடிப்பில் வெளியான ஒவ்வொரு வீடியோவும் மக்கள் மத்தியில் படு வைரலாகி வந்ததோடு வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் பெற்றது. இப்படி பிரபலமான ஹரிஜா பின்பு சினிமாவிலும் தலைக் காட்டினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “மிஸ்டர் லோக்கல்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அதேபோல நடிகர் அதர்வா நடித்த “100” அதோடு “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“ போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலர் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு எருமைசாணி சேனலில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சோஷியல் மீடியா பக்கம் தலைக்காட்டிய ஹரிஜா, ஒரு புகைப்படத்தை பதிவிட்டு “என்னவென்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்“ எனப் பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதையும் தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். அவர் தற்போது பேபி பம்ப் உடன் ஒரு போட்டோ ஷுட்டையும் நடத்தி உள்ளார்.

அந்த போட்டோ ஷுட்டில் லேவண்டர் கலரில் ஒரு நீண்ட கவுன் அணிந்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.