close
Choose your channels

'எதிர்நீச்சல்' தொடரில் இருந்து விலக போகிறாரா 'ஆதிரை' சத்யா? புதிய அறிவிப்பால் பரபரப்பு..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிரை என்ற கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜன் என்பவர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த சீரியலில் இருந்து அவர் விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சன் டிவியில் உள்ள பல சீரியல்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதில் முக்கியமாக ’எதிர்நீச்சல்’ சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் உள்ளது என்பது தெரிந்தது. இந்த சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வந்த ஜி மாரிமுத்து திடீரென காலமான நிலையில் தற்போது அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் என்பதும் தற்போது இந்த சீரியல் சூடு பிடித்து விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலின் முக்கிய கேரக்டரான ஆதிரை என்ற கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜன் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய பதிவை செய்துள்ளார். அதில் ’நான் வரும் நாட்களில் புதிய புரொஜெக்ட்களை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன், இதுகுறித்து என்னை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இமெயில் ஐடியில் தொடர்பு கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அவர் ’எதிர்நீச்சல்’ சீரியலில் இருந்து விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ தொடரிலிருந்து விலகும் ஐடியா எதுவும் இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.