close
Choose your channels

சூர்யா படத்தில் இணைந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ஸ்டண்ட் கலைஞர்!

Thursday, June 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும், இந்த படங்களின் வெற்றிக்கு ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் என்பவர் சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார். இதனால் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் லெவலுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.