close
Choose your channels

மனைவி பிரியாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அட்லி… அட்டகாசமான புகைப்படம்!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அளவில் வரவேற்பு பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வரும் நிலையில் இயக்குநர் அட்லி தனது மனைவியோடு முதல்முறையாக கேன்ஸ் விழாவில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரான்ஸில் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் இந்த விழா முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாகூர், சாரா அலிகான், ஊர்வசி ரவுடாலா, அதிதிராவ் ஹைதாரி, குஷ்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் போன்ற இந்திய பிரலபங்கள் இந்த விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன.

அந்த வரிசையில் தற்போது இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்துள்ளார். கறுப்பு நிற கோட் சூட் மற்றும் கறுப்பு நிற சேலையில் இந்த தம்பதிகள் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி‘, ‘தெறி‘, ‘பிகில்‘, ‘மெர்சல்‘ என்று அடுக்கடுக்கான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை உருவாக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இயக்குநர் அட்லி கேன்ஸ் விழாவில் பங்கெடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.