close
Choose your channels

17 வருடத்தில் நான் பெற்ற முதல் பாராட்டு.. ஜிவி பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு..!

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த 17 வருடத்தில் முதல் முறையாக ஏஆர் ரகுமான் அவர்களிடம் பாராட்டு பெறவில்லை என்றும், முதல்முறையாக இப்போதுதான் அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது என நெகிழ்ச்சியாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு அவர் அஜித் நடித்த ’கிரீடம்’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சிம்பு நடித்த ’காளை’ ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்

அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ் இசையமைப்பிற்கு இதுவரை பாராட்டு தெரிவிக்காத நிலையில் முதல்முறையாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் பின்னணி இசைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கடந்த 17 ஆண்டுகளில் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து கிடைத்த முதல் பாராட்டு என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.