close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கிடைத்த உற்சாகம்

Friday, May 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது. எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் காமெடிக்கு கியாரண்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைத்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்கள், அல்லது தயாரிக்கும் படங்களுக்கு அரசியல் காரணமாக வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டு வந்தது. ஒருசில படங்களுக்கு நீதிமன்றம் வரை சென்று வரிவிலக்கை பெற்றார். முதல்முறையாக நீதிமன்றம் செல்லாமல் உரிய நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உதயநிதி ஸ்டாலின் தரப்பு உற்சாகத்தில் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி , மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.