close
Choose your channels

நீங்களுமா? 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் இன்னும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு நடனம் ஆடாத திரையுலக பிரபலங்களே இல்லை என்ற வகையில் கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. அதேபோல் ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை பார்த்தோம்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான பத்ரிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் நீங்களுமா? என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.