close
Choose your channels

ரஜினி, விஜய்க்கு பொருத்தமான கதை: கௌதம் மேனன் பேட்டி

Saturday, February 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் ரஜினி மற்றும் விஜய்க்கு பொருத்தமான கதை வைத்து உள்ளதாக கூறியுள்ளார்

‘துருவநட்சத்திரம்’ திரைப்படம் ரஜினி நடிக்க வேண்டிய திரைப்படம் தான் என்றும், ஆனால் அது எதிர்பாராமல் அது நடைபெறவில்லை என்றும் கூறிய கௌதம் மேனன், இன்றைய நிலையில் அவருக்கு எமோஷனல் கதையை தான் பொருத்தமாக இருக்கும் என்றும், அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரை அந்த கதைக்கு நான் பயன்படுத்துவேன் என்று கூறினார்

அதேபோல் விஜய்க்கு ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படம் செய்ய வேண்டும் எனக்கு நீண்டநாளாக ஆசை என்றும், முழு திரைக்கதையுடன் அவரை சென்று பார்த்தால் அதுவும் ஒர்க் அவுட் ஆகும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் கெளதம் மேனன் மனம் திறந்து கூறிய பல விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.