கமல்-விக்ரம் இணையும் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ரம் நாயகனாகவும், கமல்ஹாசனின் இரண்டாவ்து மகள் அக்சராஹாசன் நாயகியாகவும் நடிக்கவுள்ள படம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளார். இவர் இயக்கிய கமல், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' படத்திற்கும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், அக்சரா, ராஜேஷ் எம்.செல்வா படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்ய தொடங்கிவிட்டதாகவும், மீண்டும் ஒருமுறை கமல் குழுவினர்களின் படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சி என்று ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுவிபரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More News

என்னால் விஜய் போல் இருக்க முடியாது: வரலட்சுமி

தளபதி விஜய் பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் விஜய்யின் 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார்,

'மாரி 2' படப்பிடிப்பில் தனுஷ் காயம்: ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ் நடித்து வரும் 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும்

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவுக்கு 4 வேடங்களா?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது 'என்.ஜி.கே' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, இந்த படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுவார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திடீர் சிக்கல்! படப்பிடிப்பு நிறுத்தமா?

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் வந்தது. அரசியல் கட்சிகள், ஒருசில அமைப்புகள் இந்தநிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் செய்தன. பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை

'வருங்கால முதல்வர் விஜய்' போஸ்டர் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ

விஜய் பிறந்த நாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை அவர் நடித்து வரும் 62 வது படமான 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.