close
Choose your channels

கமல்-விக்ரம் இணையும் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

Saturday, June 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ரம் நாயகனாகவும், கமல்ஹாசனின் இரண்டாவ்து மகள் அக்சராஹாசன் நாயகியாகவும் நடிக்கவுள்ள படம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளார். இவர் இயக்கிய கமல், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' படத்திற்கும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், அக்சரா, ராஜேஷ் எம்.செல்வா படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்ய தொடங்கிவிட்டதாகவும், மீண்டும் ஒருமுறை கமல் குழுவினர்களின் படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சி என்று ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுவிபரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.