close
Choose your channels

பா ரஞ்சித் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்த 'கோட்' நடிகர்.. மார்ச் 8ல் ரிலீஸ்..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர், பா. ரஞ்சித் தயாரித்த படத்தை பார்த்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜே பேபி’. இந்த படம் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த காட்சியை பார்க்க வந்த ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் பிரசாந்த் படம் முடிந்ததும் பா ரஞ்சித்தை நேரில் பாராட்டினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பா ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஜே பேபி’ டீசர் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.

தினேஷ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மாறன், கவிதா பாரதி, ஜெயா மூர்த்தி, சினேகன் நாராயணன், ஏழுமலை, தக்சா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யாமல் ஒரு வசனத்தை கூட மியூட் செய்யாமல் கிளீன் ‘யூ’ சான்றிதழ் கொடுத்ததாக பா ரஞ்சித் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos