'கோலி சோடா'வுக்காக கொடி பிடித்த சூர்யா

  • IndiaGlitz, [Saturday,June 09 2018]

இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா 2' படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஜிஎஸ்டி வண்டி செல்லவுள்ளதாகவும், இதில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சென்னையில் சற்றுமுன் இந்த ஜிஎஸ்டி வண்டி கிளம்பியது. இந்த வண்டியை நடிகர் சூர்யா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். 'கோலி சோடா 2' படத்தின் விளம்பரத்துடன் கூடிய இந்த ஜிஎஸ்டி வண்டி சென்னை, மதுரை, சேலம், கோவை உள்பட முக்கிய நகரங்களில் இன்று பயணம் செய்யவுள்ளது. அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே கேட்டறிந்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய இந்த வண்டி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, சுபிக்சா, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கோலி சோடா 2' படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார்.
 

More News

அமெரிக்காவில் காலா செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் பெருவாரியான வசூலை பெற்று கொண்டிருக்கின்றது.

'காலா'வின் வெற்றி அரசியல் களத்திலும் கிடைக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

கமலுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன், அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர்

கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் பணியில் பிசியாக இருந்தாலும், அவர் நடித்து கொண்டிருக்கும் படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்ட சமந்தா

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் குறைந்துவிடும் என்பது கோலிவுட் திரையுலகின் செண்டிமெண்ட் ஆக இருந்தது. ஆனால் அந்த செண்டிமெண்டை உடைத்து காட்டியவர் நடிகை சமந்தா.

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'ஜூங்கா. விஜய்சேதுபதியே தயாரித்து வரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது