close
Choose your channels

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, June 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'ஜூங்கா. விஜய்சேதுபதியே தயாரித்து வரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்திதான்

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் லலிதா ஆனந்த் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.