close
Choose your channels

'வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு, அதை விட்ற கூடாதுன்னு முடிவு பண்ணினேன்: 'கள்வன்' டீசர்

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில் சம்பவங்களுடன் கூடிய கதையம்சம் கொண்டது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காட்டுப்பகுதியில் நடக்கும் மயான கொள்ளை உள்பட பல மர்மமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அந்த சம்பவங்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்குவது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

‘லவ் டுடே’ நாயகி இவானா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.