close
Choose your channels

வெளியே அனுப்பிவிடுவேன்... உள்ளே சென்ற போட்டியாளர்களை எச்சரித்த பிக்பாஸ்!

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக உள்ளது.

இந்த நிலையில் உள்ளே வந்த போட்டியாளர்கள் வெளியே நடப்பதை கூறி கொண்டிருப்பதால் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் சுதாரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியே என்ன நடந்தது? யாருக்கு அதிகமாக ஆதரவு இருக்கிறது? என்பதை போன்ற தகவல்களை கசிய விட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு சில முறை பிக்பாஸ் இதுகுறித்து எச்சரித்த நிலையில் தற்போது மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். உள்ளே வந்திருக்கும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வெளியே நடந்ததை உள்ளே சொல்லக்கூடாது என்றும் அவ்வாறு மீறி கூறினால் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கடுமையாக கூறினார். குறிப்பாக இந்த எச்சரிக்கை மணிகண்டன் மற்றும் தனலட்சுமிக்கு தான் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.