close
Choose your channels

ரேசன் அரிசியை ருசி பார்த்துருச்சு, இன்னிக்கு கண்டிப்பா வரும்: ஜிவி பிரகாஷின் 'கள்வன்' டிரைலர்..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ‘கள்வன்’ என்ற படம் ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘கள்வன்’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக ’லவ் டுடே’ நாயகி இவானா நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, விஜய் டிவி தீனா, ஞானசம்பந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிவி சங்கர் என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள டிரைலரில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்து விட்டதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்கின்றனர். இதை பயன்படுத்தி ஜிவி பிரகாஷ் தனது கூட்டாளியுடன் ஒரு முக்கிய திருட்டை செய்ய களமிறங்குகிறார். அப்போது அந்த யானை அவர்களை விரட்டுகிறது, இதனை அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

ஜி.வி. பிரகாஷ், இவானா மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு அசத்தலாக இருக்கும் இந்த படம் நிச்சயம் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.