close
Choose your channels

ஜிவி பிரகாஷின் 'சூரரை போற்று' அப்டேட்

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவர் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 'சூரரை போற்று' படத்தின் பாடல் குறித்து புதிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளதாகவும் ராக் பாடலான இந்த பாடலின் இசை புதிய அனுபவத்தை அனைவருக்கும் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஏற்கனவே பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவான 'சோலோ' படத்தில் இடம்பெற்ற 'தேவதை போல் ஒருத்தி' என்ற பாடலை பாடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.