close
Choose your channels

விஜய்-வெற்றிமாறன் படம் குறித்து ஜிவி பிரகாஷ்

Monday, September 21, 2020 • தமிழ் Comments

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் ஒரு படத்தையும் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தையும் அடுத்தடுத்து இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்காக ஒரு திரைக்கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் தகுந்த நேரத்தில் இந்த படம் உருவாகும் என்றும் கூறினார். அனேகமாக ஏஆர் முருகதாஸ் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய்-வெற்றிமாறன் இணையும் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியபோது ’விஜய்-வெற்றிமாறன் இணையும் படம் உருவாகுவது உறுதி என்றும் ஆனால் அந்த படம் எப்போது என்பது குறித்து உறுதியான தகவல் கூற முடியாது என்றும் அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்

மேலும் விஜய், வெற்றிமாறன் இருவருமே இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz