close
Choose your channels

அஜித் இன்னும் 'துணிவு' படம் பார்க்கவில்லையா? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘துணிவு’ திரைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகியோர் முதல் நாள் முதல் காட்சி பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் அஜித் இன்னும் ‘துணிவு’ படத்தை பார்க்கவில்லை என இயக்குனர் எச் வினோத் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் எச் வினோத்திடம், ‘அஜித் ‘துணிவு’ படத்தை பார்த்து என்ன கருத்து சொன்னார்? என்று கேட்டபோது, ‘உண்மையாகவே அஜித் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, அவர் டப்பிங் போது அவரது காட்சிகளை மட்டுமே பார்த்தார், அவர் விரைவில் முழுபடத்தையும் பார்த்துவிட்டு என்னிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ‘துணிவு’ படத்தை பார்த்து விட்ட நிலையில் இன்னும் அஜித் இந்த படத்தை பார்க்கவில்லை என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment