close
Choose your channels

அஜித் கேரக்டர் பெயர் கடைசி வரை தெரியாதா? எச் வினோத் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்!

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜீத் ’என்ன மாதிரி ஒரு அயோக்கியன்கிட்ட மோதலாமா? என தன்னைத்தானே அயோக்கியன் என்று கூறிக் கொள்வதால் ’மங்காத்தா’ படத்தை விட செம வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ’துணிவு’ படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர்களை தெரிவித்த படக்குழுவினர், அஜித் கேரக்டரை மட்டும் ரகசியமாக வைத்திருந்தனர். ஒருவேளை டிரைலரில் அவருடைய கேரக்டர் வெளிவரலாம் என்று எதிர்பார்த்த நிலையில் டிரைலரிலும் அவரது கேரக்டர் என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் படம் பார்க்கும்போதும் கூட ரசிகர்களுக்கு அவரது கேரக்டர் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றும் கிளைமாக்ஸில் தான் அஜித்தின் உண்மையான பெயர் தெரியவரும் என்றும் அப்போது ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன ட்விஸ்ட் என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.