close
Choose your channels

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிம்பு உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘வேலாயுதம், சிம்பு நடித்த ‘வாலு’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை ஹன்சிகா தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்புவுடன் ஹன்சிகா நடித்த ’மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.