close
Choose your channels

கீர்த்தி சுரேஷா இது? ஹாலிவுட் ஸ்டைலில் ரன்வீர் சிங் உடன் வேற லெவல் ஆக்சன்..

Friday, June 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் வேற லெவலில் ஹாலிவுட் ஸ்டைலில் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் அவர் தற்போது ‘போலோ சங்கர்’, ‘சைரன்’, ‘ரகு தாத்தா’ மற்றும் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் உதயநிதியுடன் அவர் நடித்த ‘மாமன்னன்’ அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 15 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் வேற லெவலில் அவர் தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனியார் வங்கி ஒன்றின் விளம்பர வீடியோவில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் வேற லெவலில் ஆக்ஷனில் கலக்கி உள்ளார். ரன்வீர் சிங்கிற்கு இணையாக பல சாகசங்கள் செய்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

இது ஒரு உண்மையில் விளம்பர படமா? அல்லது ஹாலிவுட் படங்களின் காட்சியா என்று நினைக்கும் அளவுக்கு கீர்த்தி சுரேஷ் ஆக்‌ஷன் அந்த விளம்பர வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment