close
Choose your channels

நான் ரிவ்யூ பார்க்கிறதுமில்லை, படிக்கிறதுமில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

Thursday, August 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'மெய்' மற்றும் 'கனா' படத்தின் தெலுங்கு ரீமேக் படமான 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளிவரவுள்ளது. ஐஸ்வர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது இதுதான் முதல்முறை.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடித்த படம் உள்பட எந்த ஒரு படத்தின் விமர்சனத்தையும் தான் பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை என்று கூறினார். தற்போது அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டதால் விமர்சனத்தை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாகவும், விமர்சனத்தை பார்த்துவிட்டு ஒரு படத்துக்கு போக மாட்டேன் என்றும் கூறினார்.

'மெய்' திரைப்படம் ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்றும், இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்தது என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், தங்கை வேடம் என்றாலும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்ததால் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.