ரஜினி கட்சிக்கு செல்கிறாரா சினேகன்? அவரே அளித்த பதில்

  • IndiaGlitz, [Wednesday,October 09 2019]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான கவிஞர் சினேகன், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சிக்கு செல்ல மாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.

நேற்று சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட சினேகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது, 'நான் எப்படி ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சிக்குச் செல்வேன்? எனக்குப் பிடித்த தலைவராக கமல்ஹாசன் இருக்கிறார். அவரை நான் ஒரு ஆண் தேவதையாக நினைக்கிறேன். அவருடைய கட்சியில் வேட்பாளராக மக்களவைத் தேர்தலைச் சந்தித்திருக்கிறேன். அவருடைய கட்சியில் கடைநிலை உறுப்பினராக அவர் பின்னால் இருப்பேன். யாருக்காகவும் அவரை விட்டுச் செல்லமாட்டேன் என்றூ கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது எப்போது? என்பதே இன்னும் தெரியாத நிலையில் அவரது கட்சியில் மாற்றுக்கட்சியில் உள்ள பலர் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் 

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதிய நிலையில் இந்த கடிதம் எழுதிய 49 பேர் மீது சமீபத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே

சென்னையில் 'பிகில்' கோப்பை கால்பந்து போட்டி!

பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்டு தயாராகியுள்ள விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது 

அனைத்து ஸ்க்ரீன்களிலும் 'பிகில்' தான்: சென்னை திரையரங்கின் நிர்வாக இயக்குனர் டுவீட்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும்,