close
Choose your channels

'தி லெஜண்ட்' உள்பட இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன?

Friday, March 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நான்கு அல்லது ஐந்து தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒவ்வொரு வாரம் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் வேறு என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.

வசந்த முல்லை: பாபி சிம்ஹா, ஆர்யா, காஷ்மீரா நடிப்பில் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான இந்த படம் அமேசன் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தலைக்கூத்தல்: சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தி கிரேட் இந்தியன் கிட்சன்: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் ‘இரட்டா’ என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், மோகன்லாலின் ‘அலோன்’ என்ற மலையாள படம் ஹாட்ஸ் ஓடிடியிலும், ‘புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.