close
Choose your channels

'இரண்டாம் குத்து' டீசரில் விஜய்,விஜய்சேதுபதியின் குட்டிக்கதை!

Wednesday, October 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி திரைப்படங்களும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகமாக ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி அவரே நடித்து உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த டீசரில் ஆரம்பத்திலேயே விஜய், விஜய் சேதுபதியின் குட்டிக் கதைகளை ஒப்பிட்டு ஒரு வசனம் ஆபாசம் கலந்து உள்ளது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது விஜய், விஜய்சேதுபதி சொன்ன குட்டிக்கதை அல்ல, பல குட்டிகளை போட்டவனோட கதை’ என்பதுதான் அந்த வசனம்.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் பேய்ப்படம் என்ற பெயரில் மீண்டும் ஒரு ஆபாச படத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் சந்தோஷ் ஜெயக்குமாரின் மற்ற இரண்டு படங்களைப் போல இந்தப் படங்களும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.