ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் வரி: நாளை முதல் அமல்

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

கடைசி நேர பரபரப்பை தவிர்க்க நீண்ட தூரம் ரயில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருவது வழக்கமாக உள்ளது. மேலும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்தால் சேவை வரி இல்லை என்பதும் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இருந்தது.

இந்த நிலையில் நாளை முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தால் சேவை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15, முதல் வகுப்பு உட்பட ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த சேவைக் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, ரயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு சேவை வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் டிஜிட்டல்' முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அந்த சேவை வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சேவை வரி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால் ரயில்வே பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

More News

'கெத்தா உலாத்தனம்": 'வெறித்தனம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கவினுக்கு திடீரென ஆதரவு தெரிவித்த சாக்சி!

பிக்பாஸ் வீட்டில் ஒருசில நாட்கள் மட்டுமே காதலர்களாக இருந்த கவின் - சாக்சி இடையே திடீரென பிளவு ஏற்பட்டு காதல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து

'சாஹோ' படக்குழுவினர்களை வறுத்தெடுத்த சரத்குமார் பட நடிகை

பிரபாஸ், ஷராதா கபூர் நடித்த 'சாஹோ' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தபோதிலும்

சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: பரபரப்பு செய்தி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அக்டோபரில் விஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீஸ்?

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடும் போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு