close
Choose your channels

'கெத்தா உலாத்தனம்": 'வெறித்தனம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 'வெறித்தனம்' பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சற்றுமுன் வெளியான தகவலின்படி 'வெறித்தனம்' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் பாடல் வரியில் தளபதி விஜய் பாடிய இந்த பாடலின் புரமோ வீடியோவை அர்ச்சனா கல்பாதி வெளியிட்டுள்ளார். தளபதியின் குரலில் இரண்டு வரிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

'நம் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம் என்ன இப்ப லோக்கலுன்னா? நாம கெத்தா உலாத்தனம்' என்று தொடங்கும் இந்த பாடல் நாளை முதல் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்க போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.